துவாக்குடி செடிமலைமுருகன் கோவில் தெரு பகுதியில் 9 வீடுகள் திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி செடிமலைமுருகன் கோவில் தெருவில் உள்ள பழனி என்பவர் வீட்டில் தீடீரென தீப்பற்றியது.
காற்றின் வேகம் காரணமாக அந்த தீ அடுத்தடுத்த வீடுகளில் பரவ தொடங்கியது. இதில் சசிகலா, ருக்மணி, பாண்டிகுமாரி, உஷா, முருகேசன், ஞானப்பிரகாசம், லட்சுமி, அழகேஷ்வரி ஆகியோர் வீடுகளுக்கு மளமளவென பரவியது. இதுக்குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து நவல்பட்டு மற்றும் பெல் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
9 வீடுகள் எரிந்து சாம்பலானதில் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ் தலைமையில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு செல்வகணேஷ் வேஷ்டி, சேலை உள்ளிட்ட மற்றும் அரிசி, 5 ஆயிரம் ரொக்கமும் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை வழங்கினார். மேலும் இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments