சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் எடுத்து வந்த கைப்பையை சோதனை செய்த போது சுத்தியலில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 9.8 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments