திருவெறும்பூர் அருகே பெண் வங்கி ஊழியரிடம் 9 பவுன் நகையை பறித்துச் சென்ற இரண்டு மர்ம நபர்களை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் 11வதுகுறுக்கு தெருவை சேர்ந்தவர் எட்வின் ராஜ் இவர் திருவெறும்பூர் அருகே உள்ள மத்தியபொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி வித்தியா ( 37 ) இவர் லால்குடியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் வேலைப் பார்த்து வருகிறார்.இந்நிலையில் வித்யா நேற்று இரவு அம்மன் நகர் 10வது குறுக்குசாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவன் வித்யா அணிந்திருந்த ஆறு பவுன் தாலி செயின் மற்றும் 3 பவுன் செயின் என இரண்டு சங்கிலிகளை அறுத்துக் கொண்டு ஓடி உள்ளான்.
வித்யா கத்தி கூச்சலிட்டு பொதுமக்கள் வருவதற்குள் மற்றொருவன் பைக்கில் ஏறி தப்பிச் சென்றுள்ளான்.இச்சம்பவம் குறித்து வித்யா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பானாவத் மற்றும் திருவெறும்பூர்
இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் வந்து பார்வை இட்டதோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில்தப்பிச்சென்ற இரண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments