தீபஒளி திருநாளை கொண்டாடுவதற்காக சென்னை, விழுப்புரம், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டு தீபஒளி திருநாள் முடிந்து மீண்டும் பணி செய்யும் இடங்களுக்கும், கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும், வசிக்கும் இடங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு கடந்த (01.11.2024) முதல் (04.11.2024) அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பாக பொதுமக்கள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பான முறையில் சிறப்புபேருந்துகள் இயக்கப்பட்டது.
கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட தடப் பேருந்துகளுடன் நான்கு நாட்களுக்கும் சேர்த்து 1200 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
(01.11.2024) முதல் (04.11.2024) வரை கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை சிறப்பான முறையில் இயக்கி நான்கு நாட்களில் ஒட்டு மொத்த வருவாய் ரூ.1713. 09 லட்சம் ஈட்டியுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.428. 27 லட்சம் ஈட்டப்பட்டுள்ளது. அதிலும் (04.11.2024) அன்று ஒரு நாள் மட்டும் இயக்கத்தில் ரூ.628.13 லட்சம் ஈட்டியுள்ளது. கும்பகோணம் கோட்டத்தின் ஒரு நாளைய உச்சக்கட்ட வருவாய் ஆகும் .
அதே போல் (01.11.2024) முதல் (04.11.2024) கும்பகோணம் கோட்ட பேருந்துகளில் நான்கு நாட்களில் ஒட்டு மொத்தமாக சுமார் 93.79 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். அதாவது ஒரு நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 23.45லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இது நாளொன்றுக்கு சராசரியாக பயணம் செய்யும் பயணிகளை விட சராசரியாக நாள் ஒன்றிற்கு ஒரு இலட்சம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் (04.11.2024) அன்று ஒரு நாள் மட்டும் 29.31 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(கும்ப)லிட்., கும்பகோணம். நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments