திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த விடத்திலாம்பட்டியை சேர்ந்த விவசாயி ஆர்.பொன்னுச்சாமி, இவருக்கு சொந்தமான நிலத்தினை அருகில் உள்ள நில உரிமையாளர்கள் அபகரிப்பதாகவும், அப்பகுதியில் இருந்த பொது பாதையை ஆக்கிரமித்து கொண்டிருப்பதாகவும் இதுகுறித்து கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து வருவாய்த்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிகையும் இல்லை எனக்கூறி கடந்த கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு எழுதிய மனுக்களை மூட்டையாக வைத்து கொண்டு மணப்பாறை பேருந்து நிலையம் அண்ணா சிலை முன்பு, தனது நிலப்பிரச்சனைக்காக தனிநபராக உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். மணப்பாறை காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியும், சமரசமடையாத பொன்னுச்சாமி தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
தனக்கு இந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் தனது உடல் உறுப்புகள் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை சென்னை மருத்துவமனையிலிருக்கும் ஜனனி என்ற சிறுமிக்கு அளிக்க வேண்டும் என்றும், தனது இரு கண்களையும் கண் இல்லாதவர்களுக்கு கண் தான செய்யவும், உடலை மருத்துவ கல்லூரிக்கு பரிசோதனைக்கு அளிக்கவும் எனக்கூறி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments