திருச்சி கே.சாத்தனூரில் உள்ள அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு பங்கேற்று உப்பில் அயோடின் கலந்து இருப்பதை கண்டறியும் பரிசோதனை விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நமது உடல் ஆரோக்கியத்திற்கு அயோடின் சத்து மிகவும் அவசியம் ஆகும். உணவில் அயோடின் குறைபாட்டினால் உடலில் பல்வேறு குறைபாடுகள் ஏற்படுகின்றன. உப்பில் அயோடின் கலந்து இருக்கிறதா இல்லையா என்பதை சிறிய பரிசோதனையின் மூலம் உடனடியாக கண்டறிந்துவிடலாம் அதற்கான பரிசோதனை விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று துவங்கப்பட்டுள்ளது.
கலப்படமற்ற உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் நன்மை தரக்கூடிய உணவு பொருட்களை பயன்படுத்தி சமைத்த உணவினை உட்கொள்ள வேண்டும். அயோடின் குறித்தும் கலப்படங்கள் இல்லை கண்டறிந்து அதனை அகற்றி கலப்படமற்ற உணவுப்பொருள் உட்கொள்ளுதல் குறித்தும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் விழிப்புணர்வு கொள்ளவேண்டும்.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்விழாவில் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு, கல்லூரி இயக்குனர் முனைவர் சாகுல் ஹமீத், கல்லூரி முதல்வர் முனைவர் சுகாசினி எர்னஸ்ட் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் கல்லூரிப் பேராசிரியர்கள் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments