திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதி, ஆலத்தூர், மலைக்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை 61 முதல் 65 வார்டுகளாக திருச்சி மாநகராட்சி தனது எல்லையை விரிவாக்கம் செய்தது. இதனை தொடர்ந்து இப்பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக தனியார் நிறுவனம் மூலம் திருச்சி மாநகராட்சி பாதாள வடிகால் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டது.
இதனால் கைலாஷ் நகர், பாலாஜி நகர், பிரகாஷ் நகர் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறி சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி தவித்து வந்தனர். இந்த மோசமான சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி கொட்டும் மழையில் நேரில் சென்று அத சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் இச்சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments