திருச்சி மாவட்டத்தில் கடந்த கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் இரவு முழுவதும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இன்று மாலை திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது.
பலத்த காற்று காரணமாக திருச்சி அரியமங்கலம் ஆயில் மில் பேருந்து நிறுத்த தற்காலிக நிழற்குடை சாய்ந்துவிழுந்தலில் 2 பேர் காயமடைந்தனர்.
கொட்டி தீர்த்த கன மழையால்
பல்வேறு முக்கிய சாலைகளில் மழைநீர் சாக்கடையில் வழிந்து செல்ல போதுமான வழித்தடம் இல்லாததால் சாலையோரம் மழைநீர் தேங்கி நின்றது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர் பலத்த மழையின் காரணமாக பல பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக சென்றன.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய…
Comments