Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், பொதுமக்கள் எளிதாக எவ்வீத சீரமம் மற்றும் இடையூறும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, காரைக்கால் அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு 01.11.2021, 02.11.2021, 03.11.2021 ஆகிய நாட்களிலும்

மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 01.11.20121 முதல் 03.11.2021 வரையும், முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோன்று 01.11.2021 முதல் 03.11.2021 வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் (MEPZ) அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும்,

கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அரந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரணியம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 04.11.2021, 05.11.2021, 06.11.2021, 07.11.2021 & 08.11.2021 ஆகிய நாட்களின் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ். ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *