திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் நேற்று 01.11.2021-ஆம் தேதி திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிவாரண நிதி வழங்கும் நிகழ்வில் திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரிந்துஇ பணியின்போது மரணமடைந்த 4 காவல் ஆளினர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3,00,000/- வீதம் வழங்கினார்கள்.
திருச்சி மாநகரத்தில் 1) கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் 2) கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன் 3) எடமலைப்பட்டிப்புதூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்த உதவி ஆய்வாளர் முருகையன் மற்றும் 4) காவல் கட்டுப்பாட்டறையில் பணிபுரிந்துவந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பிச்சைபிள்ளை ஆகியோர் கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தவர்களின் உரிய வாரிசுதாரர்களுக்கு
தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3,00,000/- வீதம் மொத்தம் ரூ.12,00,000/- வழங்க கிடைக்கப்பெற்ற ஆணையின்படி பணியில் இருக்கும் போது மரணமடைந்த மேற்படி 4 காவல் ஆளினர்களின் குடும்பத்தினருக்கு நேற்று 01.11.2021-ஆம் தேதி திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிவாரண நிதி வழங்கும் நிகழ்வில் தலா ரூ.3,00,000/-ஐ திருச்சி மாநகர காவல் ஆணையர் வழங்கி மறைந்த 4 காவல் ஆளினர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
Comments