ஸ்ரீரங்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் ஆர்.எஸ்.எஸ்.ல் தென் தமிழக மாநில செயலாளராக உள்ளார்.கடந்த 4ஆம் தேதி தீபாவளியன்று மகள் தலை தீபாவளி கொண்டாடி விட்டு அவரை சென்னைக்கு சென்றுவிட சென்றுள்ளார். அவர் தம்பி ஸ்ரீதர் வீட்டில் மாலை 4 மணி வரைக்கும் இருந்துள்ளார்.
மறுநாள் 5ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அவர் தம்பி வீட்டில் இருந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து வந்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் தங்க நகை ,வெள்ளி 6 கிலோ மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே வீட்டில் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக கொள்ளை நடந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
Comments