திருச்சி அரியமங்கலம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 40). அந்த பகுதியை சுற்றிலும் உள்ள பொதுமக்களிடம் ரேஷன் கடைகளில் அவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய அரிசியை விலைக்கு வாங்கி மொத்தமாக அந்த பகுதியில் உள்ள டிபன் கடை, ஹோட்டல்கள், மாட்டு தீவனம் தேவைப்படும் நபர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குடங்கள் மூலமாக சப்ளை செய்து வந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல் துறை இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் உள்ள குடோனில் இஸ்மாயில் 4300 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து மணப்பாறை சிறையில் அடைத்தனர். பதுக்கல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
Comments