உத்திர பிரதேசத்தில் தலித் பெண்ணை கூட்டு வன்புணர்வு படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், அவர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உபி அரசை கண்டித்து திருச்சி மரக்கடை அருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விடுதலை முன்னணி மாநிலத் துணைச் செயலாளர் பிராபாகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Comments