திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் தேவராயநேரி பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் பழனியப்பன் மற்றும் சமூக ஆர்வலர் அனிலா, ஸ்ரீ காயத்ரி, ஸ்ரீஹரிபிரசாத், வார்டு உறுப்பினர் DS.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 55 மகளிர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சமூக ஆர்வலர் சார்பில் (புடவை) வழங்கபட்டது. காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி பேசுகையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு என எந்த ஒரு அவசர தேவை என்றாலும் 181, 112 என்ற எண்ணை அழைக்கலாம்.
காவல்துறை உடனடியாக அந்த பிரச்சினை தீர்வுக்கான உதவுவார்கள். பெண்கள் தங்கள் பாதுகாப்பு சட்டங்களை தெரிந்து வைத்துகொள்வது அவசியமானது என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments