திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள ராமமூர்த்தி நகரில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளது இதில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் எரிந்து சாம்பலானது.இதில் அவர்களுடைய ரேஷன், ஆதார், அடையாள அட்டை மற்றும் பல முக்கிய ஆவணங்களும், வீட்டு உபயோக பொருள்கள் என லட்சக்கணக்கில் எரிந்து நாசமாகியது.
முதல்கட்டமாக சம்பவ இடத்தில் 4 தீயணைப்பு வாகனங்கள்,3 மாநகராட்சி லாரிகள் மூலம் தீயை அணைத்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை
தீ விபத்துக்கான காரணம் குறித்து பாலக்கரை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
சம்பவ இடத்தில் 4 தீயணைப்பு வாகனங்கள்,3 மாநகராட்சி லாரிகள் மூலம் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் திருச்சி தீயணைப்பு நிலைய அதிகாரி மெல்கி ராஜா தலைமையில் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இதுவரை ஏற்படவில்லை.
திருச்சி விஷன் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments