தமிழ்நாட்டில் உணவக மேலாண்மைக் கல்வி இன்று எங்கும் புகழ் பெற்று இன்றும் வேலைவாய்ப்பு மிக்க துறையாக திகழ்கிறது. உணவக கல்வி மற்றும் விருந்தோம்பல் துறையில் 50 ஆண்டுகள் சேவை புரிந்த ஜென்னிஸ் உணவக மேலாண்மை கல்லூரி முன்னாள் தொழில்நுட்ப இயக்குனர் பொன்னிளங்கோ 1972 முதல் 50 ஆண்டுகளாக விருந்தோம்பல் துறையிலும் உணவாக மேலாண்மைக் கல்விப் பணியிளும் சிறப்பாக சேவை புரிந்ததமைக்காக அவரது நேரடி மாணவர்கள், மறைமுக மாணவர்கள். நண்பர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் இணைந்து 14.11.2021 அன்று பாராட்டு விழா நடத்தினர்.
இதில் பிரபல செஃப் தாமு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தான் பொன்னிளங்கோ அவரிடம்தான் முதலில் வேலைக்கு சேர்ந்தேன் என பெருமிதமாக நினைவு கூர்ந்தார், கௌரவ விருந்தினர் கவிஞர் நந்தலாலா பேசுகையில்… பொன்னிளங்கோ அவர்களின் தமிழ்ப் பற்று மற்றும் இலக்கியப் பற்றைக் குறித்து பேசினார். மேலும் நிகழ்ச்சியில் பலர் வாழ்த்துரை கூறும்பொழுது பொன்னிளங்கோ உருவாக்கிய மாணவர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் எண்ணற்ற வேலைவாய்ப்பு, வழிகாட்டுதல் ஆகியவற்றை நினைவு கூர்ந்தனர்.
மேலும் அவரது பங்களிப்புகளாகிய முதல் முறையாக கோவை ஹோட்டல்களில் புத்தாண்டு விழா, முதல் முறையாக திருச்சியில் உணவுத் திருவிழா மதுரை தமிழ்ச்சங்கப்பணி, பெருந்தலைவர் காமராஜ் அவர்களுக்கு விருந்தோம்பல், சிறுதானிய உணவுகளின் குறுந்தகடு வெளியீடு சிறைவாசிகளுக்கு தொழில் பயிற்சி, மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி போன்றவற்றை பலரும் நினைவு கூர்ந்தனர்.
விழாவினை சண்முக சுந்தரம் தலைமை ஏற்று நடத்தினார். மோகன்குமார் முன்னிலையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. ஏற்புரை நிகழ்த்திய பொன்னிளங்கோ, உலக உருண்டையை சுற்றி எங்கு கை வைத்தாலும் அங்கு என் மாணவர் ஒருவர் இருப்பார் தண்ணீரிலும் கப்பலில் என் மாணவர் இருப்பார் என பெருமிதம் கொண்டார். விழாவில் பொன்னிளங்கோ அவர்களுக்கு உணவக மேலாண்மைக் கல்வித் தந்தை என்ற பட்டமும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. முன்னதாக கபிலன் வரவேற்றார். நிகழ்ச்சியை சிவகுருநாதான் தொகுத்து வழங்கினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments