திருச்சி மாநகரம், கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓயாமரி சாலையில் உள்ள டாஸ்மார்க் அருகில் கடந்த (29.09.21)-ந்தேதி பாக்கியராஜ் வயது (39) என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி எதிரி மணிகண்டன் வயது (23) என்பவர் இரும்புகம்பியை காண்பித்து அவரிடமிருந்து ரூ-200/- பணம் மற்றும் அவரது இருசக்கர வாகனத்தையும் பறித்து சென்றுவிட்டதாக கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டும், வழக்கின் எதிரியை கைது செய்து
நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டர்.
விசாரணையில் இவ்வழக்கின் குற்றவாளியான எதிரி மணிகண்டன் வயது (23) என்பவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 20 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, மேற்படி எதிரி மணிகண்டன் வயது (23) என்பவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு
பாலக்கரை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து,
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்
அதனை தொடர்ந்து (29.09.21)-ந் தேதியிலிருந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் எதிரி மணிகண்டன் வயது (23) என்பவருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் படி ஆணையை (17.11.21)-ந்தேதி சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments