திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில், காசியில் பயிற்சி பெற்ற அகோரி குருவான மணிகண்டன், ஜெய் அகோரகாளி சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். இவர் அண்மையில் சுடுகாட்டில் விபத்தில் உயிரிழந்த சிஷ்யரின் உடல் மீது அமர்ந்து ஆன்மா சாந்தி பூஜை நடத்தியுள்ளார். இதுபோல் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது தாயின் சடலத்தின் மீது அமர்ந்து ஆத்ம சாந்தி பூஜை செய்தவர்.
இந்நிலையில் கல்கத்தாவைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் அகோரி எட்டு வருடங்களாக அகோரி பயிற்சி பெற்று வந்த நிலையில், அவருக்கும் அகோரி குருவான மணிகண்டனுக்கும் அதிகாலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது அகோரி மணிகண்டன் தன் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு அகோரி கோலத்தில் மாலை மாற்றி கொண்டு பெண் அகோரியை திருமணம் செய்தார்.
முன்னதாக சிறப்பு யாகம் நடைபெற்றது யாகத்தின் போது சக அகோரிகள் தமரா மேளம் அடித்தும், சங்கொலி எழுப்பி ஹர ஹர மகாதேவா என்று முழங்கினார்.
அந்த திருமணத்தை அகோரி மணிகண்டன் குருவான சித்தர் வழியை பின்பற்றும் மதுரைபால்சாமி என்பவர் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணம் முடிந்த பிறகு மீண்டும் யாகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments