திருச்சி தில்லைநகர் 6வது கிராஸில் வசித்து வருபவர் சீனிவாசன் (50). இவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர் இன்று அதிகாலை ரூமில் உள்ள லாக்கரை திறக்க முயற்சிக்கும் போது சத்தம் கேட்டு அவரது மகன் பார்க்க மர்மநபர் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
மேலும் 10 பவுன் தங்க நகைகளும், ஒன்றரை லட்ச ரூபாய் பணம், வாட்ச் உள்ளிட்டவை திருடு போனதாக போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments