Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நூறு சதவீதம் ஆதாரத்துடன் உண்மை குற்றவாளிகளை பிடித்து உள்ளோம் சிபிஐ விசாரணை அவசியமில்லை என  தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருச்சியில் பேட்டி

கடந்த (21.11.2021) அன்று ஆடு திருடர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட திருச்சி நவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் வீட்டில் அவரது படத்திற்க்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, ஐஜி, டிஐஜி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவல் துறை இயக்குனர்… அவருடைய இழப்பு பெரிய இழப்பாக இருக்கிறது. சிறந்த காமன்டட் பயிற்சி எடுத்துள்ளார். வீரத்தோடும் விவேகத்தோடும் தான் பணிபுரிந்துள்ளார். 15 கிலோமீட்டர் தூரத்தில் சென்று ஆடு திருடர்களை பிடித்து ஆயுதத்தையும் பறிமுதல் செய்துள்ளார். ஆடு திருடர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது திடீரென ஆயுதத்தால் தாக்குதல் நடத்தி உள்ளதால் பூமிநாதன் இறந்துள்ளார். தமிழக முதல்வர் ஒரு கோடி நிதி உதவி தொகையும், பணி வழங்குவதாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். 1856 ஆண்டிலிருந்து காவல்துறை மீது தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம், இறந்த பூமிநாதன் உயிர்த்தியாகம் செய்து கடமையை காப்பாற்றியுள்ளார்.

ரோந்து பணியில் செல்பவர்கள் கைத்துப்பாக்கி ஆறு தோட்டாக்கள் எடுத்து செல்வதற்கு அறிவித்துள்ளோம். உயிரை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது என்று தெரிவித்துள்ளோம். விரைவில் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கும் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். சிறுவர்கள் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் பல முயற்சிகள் நடக்கிறது, 52 சிறார் கிளப்புகள் ஆரம்பிப்பதற்கு திட்டம் போய்க் கொண்டுதான் இருக்கிறது. கொலையாளி மணிகண்டன் மது அருந்தி இருந்துள்ளார்.
இந்த கொலைக் குற்றத்தில் மூன்று பேர் தான் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த கொலை குற்றத்தில் ஆதாரத்தின் அடிப்படையில் புலன் விசாரணை முழுமையாக விசாரித்து விட்டேன். 100% புலனாய்வின் அடிப்படையில் உண்மை குற்றவாளிகளை பிடித்துள்ளோம். சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை என குறிப்பிட்டார். இதில் சந்தேகத்திற்கு இடமில்லை இவர்கள் தான் கொலை செய்துள்ளனர் என தெரிவித்தார். பின்னர் நவல்பட்டு காவல் நிலையத்திற்க்கு வந்து ஆய்வு நடத்தி தனிப்படையில் இருந்த ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 15 காவல் துறையினருக்கு தமிழக காவல்துறை இயக்குநர் பாராட்டு தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *