திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அளுந்தூர் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இதனை அறிந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று நீர் வழித்தடங்கள் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பொக்லைன் இயந்திரம் வைத்து நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டு நீர் வடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டார். இதனால் அப்பகுதி மக்கள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு நன்றி தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments