கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக ரவி பணிபுரிந்த போது கடவுச்சீட்டு பரிசோதனைக்காக சீனிவாசன் என்பவரிடம் 500 ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்கு பதிந்து திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இன்று நீதிபதி கார்த்திகேயன், தலைமை காவலர் ரவிக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து உள்ளார். தற்போது அவர் பணியில் இருப்பதால் விரைவில் அவருக்கு பணியிடை நீக்க உத்தரவு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments