தொடர் மழை காரணமாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் கவுற்றாறு என்றழைக்கப்படும் காட்டாற்றில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுகிறது. காட்டூர் பாலாஜி நகர் குடியிருப்பு வழியாக செல்லும் இந்த காட்டாற்றில் தற்போது முதலையின் நடமாட்டத்தை அவ்வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
இதனை செல்போன் மூலம் வீடியோ எடுத்து அப்பகுதியில் உள்ள வாட்ஸ்அப் குழுவில் ஒன்று பகிரப்பட்டது. இதனால் பாலாஜி நகரில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஆற்றின் கரையில் குடியிருப்போர் மற்றும் கரை வழி சாலையை பயன்படுத்துபவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், முதலை நடமாட்டம் தெரிந்தால் உடனே
முதலில் நேரில் பார்த்தவர்களும் இக்காட்சியை படமாக்க அவர்களும் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்கள் அச்சத்தைப் போக்கி முதலில் தீயணைப்பு வீரர்கள் மூலம் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
வனத்துறைக்கோ அல்லது தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு நகர் நலசங்க நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து வெளிவரும் பாம்புகள் ஒரு பக்கம் அச்சத்தை ஏற்படுத்தி வரும் வேளையில், முதலையின் நடமாட்டம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments