Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

VDart நிறுவனம் மாநகர காவல்துறையுடன் திருச்சி மன்னார்புரம் சிக்னலில் ஒளிரும் விளக்கு கம்பம் துவக்கம்

திருச்சி மாநகர தெற்கு சரக பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமுள்ள ஏழு முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து இடையூறுகளையும் வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையில் போக்குவரத்து தானியங்கி சிக்னல்கள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன. இவற்றில் ஒன்றாக மன்னார்புரம் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து தானியங்கி சிக்னல் புதிய மாற்றங்கள் செய்து சிக்னலை தங்கியுள்ள கம்பம் முழுவதுமாக சிக்னல் விளக்கு எரியக் கூடிய வகையில் நவீன படுத்தப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து தானியங்கி சிக்னல் திருச்சி மாநகர காவல் ஆணையர் என்று இயக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். இதேபோன்று தலைமை தபால் நிலைய சந்திப்பு மற்றும் பால் பண்ணை சாலை சந்திப்புகளில் இயங்கி வரும் போக்குவரத்து தானியங்கி சிக்னல்களை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக விமான நிலையம் காவல் ஆணையர் அலுவலக சந்திப்பு காவல்துறைத் தலைவர் அலுவலகம் சந்திப்பு கல்லூரி சாலை சந்திப்பு குட்செட் மேம்பால சந்திப்பு தினத்தந்தி அலுவலகம் சந்திப்பு ஆகிய சாலை சந்திப்புகளில் புதிதாக ஒளிரும் விளக்கு கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. வாகன விபத்துகளை போக்குவரத்து இடையூறுகளும் தடுக்க  மாநகர காவல் துறையினர்  மேற்கொள்ளப்படும். இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளினால் கடந்த 2020 ஆம் ஆண்டைவிட நடப்பு ஆண்டில் 2021ல் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

முன்னதாக திருச்சி மன்னார்புரம் பகுதியில் நடைபெற்ற துவக்க விழாவில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகர துணை ஆணையர்கள் சக்திவேல் ,முத்தரசு மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். தானியங்கி சிக்னல் ஒளிரும் விளக்குகளை அமைத்து கொடுத்த  VDart குழும துணை தலைவர் ஆலிவர் சாம்யை காவல் பாராட்டி பேசினார்..மேலும் இந்நிகழ்ச்சியில் நவித் இயக்குநர் VDart குழுமம்,சங்கர நாராயணன் மூத்த மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn 

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *