திருச்சி நகரியம் கோட்டம், உறையூர் பிரிவிற்கு உட்பட்ட பாத்திமா நகர் பகுதியில் வெள்ள பாதிப்பு காரணமாக கடந்த மாதம் (27.11.2021) முதல் (30.11.2021) வரை மின் கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ள இயலாததால் பாத்திமா நகர், அகத்தியர் தெரு, நக்கீரன் தெரு, சோழன் தெரு, திலகர் தெரு, விவேகானந்தர் தெரு, அசோகர் தெரு, புத்தர் தெரு, பரமஹம்சர் தெரு, கம்பர் தெரு, நேதாஜி சாலை, ஒளவை தெரு, இளங்கோ தெரு,
இராஜராஜதெரு ஆகிய பகுதிகளில் நவம்பர் மாதம் மின்பயன்பாடு கணக்கீடு செய்ய விடுப்பட்ட மின் இணைப்புகளுக்கு முந்தைய மாத பயனீட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும், வசூலிக்கப்படும் மின் கட்டணம் ஜனவரி மாத கணக்கீட்டின் போது சரி செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற் பொறியாளர் ச.பிரகாசம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments