திருச்சி அரியமங்கலம் பகுதியில் அதிகமாக ரேஷன் அரிசியை கடத்தி கோழித் தீவனமாகவும், ஓட்டலுக்கு விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. இது போன்ற குற்றச் செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் விவேகானந்தன், உதவி ஆய்வாளர் அலாவுதீன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் அந்த வழியாக மினி லாரி ஒன்று வந்தது. அங்கு சோதனை பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை பார்த்ததும் அந்த மினி லாரி நிற்காமல் தப்பி செல்ல முயன்றது.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக அந்த வாகனத்தை சென்று சிறிது தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் நடந்திய விசாரணையில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ரகமத்துல்லா மற்றும் அவரது நண்பர் முத்துக்குமார் ஆகிய இருவரும் சுமார் 3 ஆயிரத்து 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து லால்குடி சிறையில் அடைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments