திருச்சி பாலக்கரை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கூனி பஜார் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று அங்கு சுற்றித் திரிந்த நாய் ஒன்றினை கல், கம்பு, கட்டைகளால் தாக்கி கொன்றனர். பின்னர் ஆட்டோ ஒன்றில் அமர்ந்த நபர்கள் அந்த நாயினை ரோட்டில் தரதரவென இழுத்து சென்றனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து விலங்கு நல அமைப்பினர் புகார் கொடுத்ததன் அடிப்படையில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தனர்.
இதனையடுத்து முதல்கட்ட விசாரணையில் திருச்சி கூனிபஜார் பகுதியை சேர்ந்த வீரமணி, செலத்துரை ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதற்கிடையில் நாயை அடித்துக் கொன்ற வீரமணியை ஏற்கெனவே நாய் கடித்தால், ரேபிட் நோய் பரவும் என்பதால், வீரமணியை 40 நாட்கள் கண்காணித்து பின்னர் கைது செய்ய உள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments