திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் ஒன்று வந்தது. இதனையடுத்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் மேற்படி நாகையை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி ஒருவர் வௌ்ளை நிற ஸ்கார்பியோ காரை வேகமாக வருவதாகவும், அதனை மடக்கி பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து துவாக்குடி சுங்கச்சாவடியில் அந்த காரை மடக்கி பிடிக்க துவாக்குடி போலீசார் காத்திருந்தனர். அப்போது தஞ்சாவூரிலிருந்து இருந்து திருச்சி நோக்கி வந்த அந்த காரை போலீசார் நிறுத்த முயன்ற போது நிற்காமல் தடுப்பு கட்டைடை இடித்து தள்ளியது. கார் இடித்து தள்ளிய தடுப்புகட்டை மோதி அங்கு நின்றிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் கீழே விழுந்து காயமடைந்தார்.
அப்போது காரை ஓட்டி சென்ற நபர் மின்னல் வேகத்தில் திருச்சி நோக்கி சென்றுள்ளார். இது குறித்து துவாக்குடி போலீசார் திருச்சி மாநகர போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை தொடர்ந்து திருச்சி மாநகர போலீசார் எச்சரிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் திருச்சி மாநகர எல்லைக்குள் அந்த வௌ்ளை நிற ஸ்கார்பியோ கார் வரவில்லை. இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து கடத்தல் காரை தேடி வருகின்றனர். சுங்கச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டு போலீசார் மடக்கி பிடிக்க முயன்ற போது கார் தடுப்பு கட்டை மோதி வேகமாக சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments