Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்டத்தில் 410 பழுதடைந்த பள்ளி கட்டிடங்களில் 130 கட்டிடங்கள் தவிர மீதமுள்ள அனைத்தும் இடிக்கப்பட்டுள்ளன

திருச்சி இந்திய மருத்துவ மன்ற அரங்கில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு கைத்தறித் துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியமாவட்ட ஆட்சியர் சிவராசு….. கைத்தறி துறையின் சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி இன்று தொடங்கப்பட்டது. இலக்கு ஒரு கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 50 லட்ச ரூபாய் இலக்கு செய்யப்பட்டு 80 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு கண்டிப்பாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும். 30% தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த பண்டிகை காலத்தில் கொரோனோ விதி முறைகளை கடைபிடித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு விதிமுறைகளை அறிவிக்கும் அதன்படி செயல்படுவோம். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகள் தான் கடைபிடிக்கப்படும். ஒமிக்ரான் வருவதனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த உள்ளோம். 15 இருந்து 18 வரை வயதினருக்கும் தடுப்பூசி செலுத்த உள்ளோம்.

மக்களிடம் முகக்கவசம் அணிவதில் விழிப்புணர்வு இல்லை. அதேபோன்று இடைவெளி இல்லாமல் நெருங்கி கொண்டு பொது மக்கள் இருக்கிறார்கள். முதலாவது அலை, இரண்டாவது அலை இருந்த பாதிப்பு தற்போது இல்லை என்றாலும் ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது. ஒரு முறைசோதனையில் பாசிட்டிவ் என வந்துவிட்டால் 7 நாட்கள் மருத்துவமனையில் இருக்கக் கூடிய சூழ்நிலை வரும். ஆகையால் முகக்கவசம் முறையாக அணிந்து கொள்ள வேண்டும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 87 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளோம். அதே போன்று இரண்டாவது தவணை தடுப்பூசி 58% செலுத்தி உள்ளோம். திருச்சி மாவட்டத்தில் 13% பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள்.

அவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதே போன்று இரண்டாவது தவணை தடுப்பூசி ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் கண்டிப்பாக ஒமிக்கிறானிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். சில தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புக்கு சிறப்பு வகுப்புகள் நடக்கிறது அதை நாம் தடுக்கவில்லை. அனைத்து வகுப்புகளும் வைத்திருந்தால் அந்த பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் 410 கட்டிடங்கள் இருந்துள்ளன. அதில் 130 கட்டிடங்கள் மராமத்து வேலைகள் நடைபெறுகிறது.

மீதமுள்ள அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டுள்ளன. தாராநல்லூர் கல்மந்தை காலனி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களை என்.ஐ.டி வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர். இரண்டாவது கட்ட ஆய்வு செய்து விட்டு அறிக்கை கொடுப்பார்கள் அதன் பின்னர் குடியிருப்பு வாரியத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். அதுவரை பயனாளிகள் ஒதுக்கீடு எதுவும் இதுவரை செய்யவில்லை என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *