திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டு ராஜா வீதியை சேர்ந்தவர் ஸ்டீபன் சவரிமுத்து இவரது மனைவி எழிலரசி (38). இவர்களுக்கு சொந்தமான மளிகைக்கடை காட்டூர் அம்மன் நகர் 5வது தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள மளிகை கடையில் ஸ்டீபன் சவரிமுத்து மதியம் சாப்பிட சென்றதால் அவருடைய எழிலரசி மட்டும் கடையில் தனியாக இருந்துள்ளார்
அப்போது கடைக்கு வந்த மர்ம நபர் எழிலரசி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினை பறிக்க முயன்று உள்ளார். இதில் எழிலரசிக்கும் அந்த மர்மநபர்க்கும் இடையே போராட்டம் நிகழ்ந்துள்ளது.
இதில் எழிலரசி தனது தாலி செயினை விடாமல் இழுத்து பிடித்ததால் திருடனும் எழில்ரசி தாலி சங்கிலி அறுத்ததில் கழுத்தில் காயம் ஏற்பட்டதோடு எழிலரசியின் கன்னத்தில் கத்தியால் பலமாக கழித்துள்ளான்.
இதனால் வலி தாங்க முடியாமல் எழிலரசி அலறி கூச்சலிட்டதால் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டான். மேலும் எழிலரசியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் காப்பாற்றி காட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments