திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது பகவதி அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற இத்தலத்தில் பெருந்திருவிழா (31.12.21) டிச.31ந் தேதி திருவிழா தொடங்கியது. முக்கிய திருவிழாவான ‘தனலெஷ்மிக்கு அலங்காரம் ‘வெகு விமர்சையாக நடைபெற்றது. 10, 20, 50, 100, 200 , 500, 2000 ரூபாய் நோட்டுகளால் உற்சவரை சுற்றி தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தங்க நாணயங்களால் உற்சவருக்கு அலங்காரம் செய்து பக்தர்களை பிரமிக்க வைத்துள்ளனர்.
பல லட்ச ரூபாய் நோட்டுகளினால் பகவதி அம்மன் நேர்த்தியோடு அழகாக அமைக்கப்பட்டு ‘தனலெஷ்மி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்த தனலஷ்மி அலங்காரத்தில் அம்மன் தரிசிப்பதால் கடன் பிரச்சினை தீரும், செல்வ வளம் பெருகும் என்பதால் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி திருவிழா நடைபெற்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments