1) திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம். 2) திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ். 3) பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகம். 4) துறையூர் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி. 5) சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி ஆகிய 5 இடங்களில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான சிறப்பு சிகிச்சை மையங்களும், அவற்றில் மொத்தம் 2000 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.
மேலும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் 1200 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 1100 படுக்கைகளும் என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 4300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments