பங்களாதேஷை சேர்ந்த சௌரவ்சன் (23). இவர் திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில கல்லூரிக்கு கடந்த மாதம் 4-ஆம் தேதி தான் கொரோனா விடுமுறை முடிந்து வந்துள்ளார். ஞஇந்த நிலையில் சௌவ்ரசனுடன் தங்கியிருந்த சக மாணவர்கள் வெளியே சென்று விட்டு மீண்டும் அறைக்கு வந்த போது, அறையின் உள்பக்கம் தாழிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது சௌரவ்சன் அறையின் மின்விசிறியில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார் செளரவ்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து சௌரவ்சன் எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அறையின் சக மாணவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments