திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை சேர்ந்த மூக்கன் என்பவர் தனது மனைவியுடன் அரசு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எம்ஜிஆர் நகர் ஜங்ஷன் பகுதியில் மாரிமுத்து மற்றும் விக்னேஷ் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் சகோதரர்கள்.
அதை மூக்கன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அவரை மிரட்டி பணத்தை பறித்து அவரைத் தாக்கி சட்டையை கிழித்து உள்ளனர். மேலும் விக்னேஷ் நீள வாள் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அப்பகுதியில் வருபவர்களை மிரட்டி உள்ளார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து விக்னேஷ் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments