Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் 2மாத குழந்தையை மது ,சூதாட்டத்திற்க்கு விற்ற தந்தை- 3பேர் கைது.

திருச்சி உறையூர் கீழ பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்சலாம். இவரது மனைவி கைருநிஷா இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளது. கடந்த 2 மாதத்துக்கு முன் பிறந்த ஆண் குழந்தையை அப்துல் சலாம் அண்ணா நகர் ஆரோக்கியராஜ் மூலமாக தொட்டியம் கீழ சீனிவாசநல்லூர் சந்தானம் குமாரிடம் குழந்தையை விற்றுள்ளார்.

 இந்த குழந்தையை விற்றதற்கு 10த்திற்க்கும் மேற்பட்ட தவணைகளாக சிறிய சிறிய தொகையாக 80,000 ரூபாய் அப்துல் சலாம் ஆரோக்கியராஜ் மூலம் பெற்றுள்ள அப்பணத்தை வைத்துக் ஆரோக்கியராஜுவுடன் மது குடித்தும் மற்றும் சூதாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.

 முதலில் அப்துல் சலாம் கைருநிஷா தம்பதியினர் குழந்தையை கொடுக்க சம்மதம் தெரிவித்திருந்தார்கள். பின்பு கைருநிஷா தொடர்ந்து அப்துல் சலாமிடம் தனது குழந்தை வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் உடனடியாக உறையூர் காவல் நிலையத்தில் கைருநிஷா புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரித்த போலீசார் அப்துல்சலாம் ஆரோக்கியராஜ் ,சந்தான குமாரை கைது செய்தனர். ஆண் குழந்தையை மீட்டு தற்பொழுது காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மூவரையும் திருச்சி குற்றவியல் நீதிமன்ற எண் நான்கில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் (04/2/22) அடைக்க நீதிபதி உத்தரவிட்டார் .தற்போது மூவரும் மணப்பாறை கிளைச் சிறையில் உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *