திருச்சி மாவட்டத்தில் 65 வார்டுகள் கொண்ட திருச்சி மாநகராட்சி மற்றும் 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளை(28.01.2022) துவங்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களின் வேட்புமனுக்களை கீழ்கண்ட அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம் என திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான சிவராசு தகவல் வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 401 வார்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments