Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் வரவேண்டும் என முதல்வரிடம் கேட்டுள்ளோம் – அமைச்சர் கே. என் .நேரு பேச்சு

திருச்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி திருச்சி மத்திய மாவட்டம், திருச்சி மேற்குத் தொகுதி, திருச்சி மாநகரம் காஜாமலை பகுதியை சேர்ந்த பூத் கமிட்டி மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி தென்னூர் கே எம் சி மருத்துவமனை அருகே உள்ள மைதானத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்..  

இதன் பின் பேசிய அமைச்சர்…..திருச்சி மாநகரில் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வீடுகள் தருவது பட்டா மாறுதல் மட்டுமல்ல நமது ரேஷன் கார்டுகள் முதியோர் உதவித்தொகை கிடைக்கும் வகையில் நம்முடைய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தந்திருக்கிறார்கள். மேலும் படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மூலமாக மணப்பாறையில் சிப்காட் வளாகம் வர  இருக்கிறது.   அதேபோல் இராணுவ தடவாளம்  உற்பத்தி செய்கின்ற HAPP போல இந்தியாவில் இருக்கிற தளவாடங்களை உற்பத்தி செய்கிற தொழிற்சாலையும் திருச்சியில் தான் வர  இருக்கிறது.

தமிழகத்தில்   கிட்டத்தட்ட 21 மாநகராட்சி  128 நகராட்சிகள் இருக்கிறது 490 பேரூராட்சியில் இருக்கிறது வேற எந்த துறைக்கும் இல்லாமல் இந்த துறைக்கு மட்டும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் பணம் தந்து அந்த பகுதியில் தொடர்ந்து பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் திருச்சிக்கு மட்டும் 128 கோடிக்கு திட்டங்கள் வந்துள்ளது…

 திருச்சி மாநகராட்சி 65 வார்டுகள் உள்ளது அதை சென்னைக்கு நிகராக  விரிவு படுத்தி இருக்கின்றோம்.. மத்திய அரசு சுற்றுச்சூழல் தரப்பில் இருந்து இந்தியாவில் உள்ள 45 பெரு நகரங்களில் ஒவ்வொரு நகரத்திற்கும் சுற்றுச்சூழல் சரிபடுத்திவதற்காக 1000 கோடி ஒடுக்கிஉள்ளது தமிழகத்தில் சென்னை, திருச்சி,மதுரை ஆகிய 3 நகரங்களுக்கு சுற்றுச்சூழலை மேம்படுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது..

திருச்சி மாநகர மக்கள் 1000 பேருக்கு தேர்தல் முடிந்து பட்டா வழங்க இருக்கின்றோம் மாநகர் பகுதிகளில் இலவச பட்டா வழங்க கூடாது என அவசர சட்டம் வந்தது அதை கலைஞர் மாற்றினார்.. திருச்சி மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க உள்ளோம் என்றார் 

மேலும் திருச்சி மாநகர் 27-வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அன்பழகன் வெற்றி பெற்று திருச்சி மாநகர மேயராக வர வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கேட்டு உள்ளோம் அதை செய்து தருவார் என நம்புகிறோம் என தெரிவித்தார். மேலும் திமுக கூட்டணி கட்சியான 23-வது வார்டில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுரேஷ் ஆகியோரை ஆதரித்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் வைரமணி,முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மேயர் வேட்பாளரான  அன்பழகன், , பகுதி கழக நிர்வாகிகள் மாவட்ட கழக நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *