Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் இலவச வெல்டிங் பயிற்சி :

 திருச்சி திருவரம்பூர் ஆர்கே மெட்டல்ஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச வெல்டிங் பயிற்சி வருகின்ற. பிப்ரவரி 21மற்றும் மார்ச் 2ஆம் தேதிகளில் தொடங்க உள்ளது.

இதில் ஷீல்டெடு தமிழ்நாடு திறன் மெட்டல் ஆர்க் வெல்டிங்(80நாள்),வெல்டிங் டெக்னிஷியன்(50நாள்),கேஸ் டங்ஸ்டன் மெட்டல் ஆர்க் வெல்டிங்(60நாள்) பயிற்சிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுடைய 18 வயது முதல் 45 வயதிற்கு வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசு சான்றிதழ் வழங்கப்படும்.வேலைவாய்ப்பும் பெற்று தரப்படும் விருப்பமுள்ளவர்கள் ஆதார், கல்வி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் நகல், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் நேரில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 9965541005,9443142005 என்ற எண்களிலும்,rkmetaltrichy@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் கனகசபாபதி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *