Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இந்தியாவிலேயே மத ஒற்றுமையுடன் கலச்சாரமிக்க நகரம் திருச்சி – முன்னாள் நிதியமைச்சர் பெருமை

திருச்சி மாநகராட்சி 31வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுஜாதாவை ஆதரித்து வரகனேரியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். அப்போது பேசிய அவர்… ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் முதலமைச்சராக இருந்து ஏன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. ஏன் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய தேர்தலை நடத்த வில்லை. இதற்கு பதில் கூறிவிட்டு ஆளுங்கட்சியை பார்த்து கேள்வி கேளுங்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவோம் என்று கூறினார்கள் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த உள்ளாட்சி தேர்தல் பரப்புரை மேடையில் தான் தற்பொழுது இபிஎஸ், ஓபிஎஸ் கேள்வி கேட்கிறார்கள்.

நான் ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கில் போடுவேன் என்று சொன்னார் பெரியவர் (மோடி) இதுவரைக்கும் போடவில்லை.
இதை ஏன் ஓபிஎஸ், இபிஎஸ் கேட்கவில்லை என கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 18 பேர் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். 18 குடும்பத்திற்கும் அரசு வேலை திமுக கொடுத்தார்கள். ஆயிரம் ரூபாய் வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும் அது குடும்பத் தலைவிக்கு தான். இவர்கள் இபிஎஸ் ஓபிஎஸ் ஆயிரம் ரூபாய் கூட இல்லை போல என கிண்டலடித்தார்.

தேர்தல் வாக்குறுதிகள் ஒரு நாளில் நிறைவேறுவதில்லை 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவது. இபிஎஸ், ஓபிஎஸ் அவர்களுக்கு ரொம்ப அவசரம். நாடாளுமன்ற தேர்தல் ரோடு சட்டமன்றத் தேர்தல் வருமாம். அரசியல் சாசனத்தை யாரும் மாற்ற முடியாது. கிளி ஜோசியம் சொல்வதை இபிஎஸ், ஓபிஎஸ் நிறுத்திக் கொள்ளவும். அதிமுகவும், பாஜகவும் கூட்டணி சேர்ந்தது பலத்தை கூட்டுவதற்கு என்று சொன்னார்கள். தற்பொழுது தனியாக நிற்கிறார்கள் அவர்கள் பலத்தைக் காட்டுவதற்காக என்று குறிப்பிடுகிறார்கள் என்றார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது விஷமத்தனம் விஷமத் தனமான பேச்சு இதை எச்சரிக்கை வேண்டும். இன்று அதிமுகவும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறுகிறது இது விஷம பேச்சு. பாரதிய ஜனதா கட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சி நடைபெறாது. கடைசியில் ஒரே நாடு ஒரே அரசியல் கட்சி என்று வந்து விடுவார்கள்.  மேலும் ஒரே உணவு, ஒரே உடை என்று வந்து விடுவார்கள் அதன் வெளிப்பாடுதான் கர்நாடகவில் ஹிஜாப் விவகாரம் வந்தது. இந்தியாவிலேயே திருச்சி கலாச்சார மிக்க இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையுடன் இருக்கக்கூடிய நகரம் என்ற சிறப்பு வாய்ந்தது என பெருமையுடன் பேசினார்.

பின்னர் ஒரே பிரதமர் நரேந்திர மோடி என்று வந்துவிடும். சீனா, ரஷ்யா, துருக்கி இந்தப் பாதையில் தான் சென்றார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தற்போது தெரியும் என குறிப்பிட்டு பேசினார். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 97% மார்க் கொடுத்து வெற்றி அடைய செய்தீர்கள் தற்பொழுது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத மார்க் கொடுத்து வெற்றி பெற வைக்க வேண்டுமென தேர்தல் பரப்புரையில் கேட்டுக்கொண்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *