திருச்சி கொட்டப்பட்டில் தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் வாயிலாக திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நாளொன்றுக்கு 4 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் பால், கொள்முதல் செய்யப்படுகிறது. தினசரி விற்பனையாக 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் அங்கிருந்த பாய்லர் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்த ஆயில் குழாய் அதீத வெப்பம் காரணமாக வெடித்து சிதறி கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த புத்தூஸ் ( வயது 34) என்ற ஒப்பந்த ஊழியர் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு உடனடியாக தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.me/trichyvisionn
13 Jun, 2025
358
24 February, 2022










Comments