திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி – கலா தம்பதியினரின் ஒரேமகளான ஸ்ரீநிதி உக்ரைன் தலைநகரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவபடிப்பில் சேர்ந்து பயின்று வருகிறார். தற்போது உக்ரைனில் நிலவும் போர்பதற்றத்தினால் தமிழக மாணவ, மாணவிகள் பலரும் அங்கு சிக்கித் தவிக்கும் நிலையில் தங்களது ஒரே மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுஅளித்தனர்.
இதேபோன்று உக்ரைனில் இன்ஜினியரிங் இறுதியாண்டு பயின்றுவரும் திருவெறும்பூர் கீழமுல்லைக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சக்திவேல் மகன் அஜீத்தையும் மீட்க வேண்டி மனுஅளித்தனர். மேலும் 2 வேளை மட்டுமே உணவு கிடைப்பதாகவும், நேற்றுடன் அவர்களுக்கான உணவும் தீர்ந்தநிலையில் அவர்களுக்கான உணவும் கிடைக்கவில்லையென்று தெரிவித்ததாகவும், அதேநேரம் தங்களது பெற்றோர்கள் அச்சப்படுவார்கள் என்பதால் அங்கும் நிலவும் எதையும் சொல்லமறுப்பதாகவும், தங்களது குழந்தைகளை மீட்க மத்திதய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments