Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தென்னக ரயில்வே பயிற்சி முடித்த ஆக்ட் அப்ரண்டீஸ் மனுக்கள் அனுப்பும் முகாம்

திருச்சி பொன்மலையில்  27.02.2022 அன்று தென்னக ரயில்வே பயிற்சி முடித்த ஆக்ட் அப்ரண்டீஸ் மனுகள் அனுப்பும் முகாம் நடந்தது. அதில் கடந்த ஜனவரி 31ந் தேதி அறிவித்த பத்திரிகை செய்தி வாயிலாக 2017 ம் ஆண்டு வரை தென்னக இரயில்வேயில் பயிற்சி முடித்த மாணவ மாணவியர்களை பணி நியமனம் செய்ததாக செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து அதை ஏற்க மறுத்து, ஆக்ட் அப்ரண்டீஸ் மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்திய விளைவாக இந்திய இரயில்வேயில பயிற்சி முடித்த ஆக்ட் அப்ரண்டீஸ்களின் குறை நிறைகளையும் ஆலோசனைகளையும் கேட்பதற்கு இரயில்வே வாரியம் அனைத்து இரயில்வே மண்டலங்களுக்கும் கடிதம் மூலமாக அறிவுறுத்தி அந்தந்த மண்டல மேலாளர்களை அதற்கான சிறப்ப முகாம் நடத்த உத்தரவு இடப்பட்டது.

இதில் முக்கியமாக தென்னக இரயில்வே எந்த ஒரு கோட்டத்திலும் சரிவர அறிவிப்பு வெளியிடவில்லை. அதை தொடர்ந்து திருச்சி கோட்ட மேலாளரை தொடர்பு கொண்ட போது முகாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் யாரும் வரவில்லை என பதில் அளித்தனர் ஏன் அறிவிப்பு தரவில்லை என்று கேட்டதற்கு சரியான பதில் இல்லை. ஆனால் குறைகளை எங்களுக்கு கடிதம் மூலம் தாருங்கள் இரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கிறோம் என தெரிவித்தனர்.

அதன் விளைவாக தென்னக இரயில்வேயில் பயிற்சி முடித்த ஆக்ட் அப்ரண்டீஸ் மாணவ மாணவியர்கள் சுமார் 2000 பேர் தங்கள் குறைகளை மனு மூலம் சமர்ப்பித்தனர். அதில் விடுபட்ட மாணவ மாணவியர்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் இன்று 27.02.2022 பொன்மலை பகுதியில் ஒன்று கூடி தென்னக ரயில்வே மேலாளருக்கும், இந்திய ரயில்வே வாரியத்திற்கு எழுதி தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பில் மனு சமர்ப்பித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *