Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி ரிலையன்ஸ் சூப்பர் மார்கெட் தரைதளத்தில் தீவிபத்து – பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையம் அருகில் உள்ள ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இதில் தரைதளத்தில் பர்கர் விற்பனை செய்யும் சிறிய கடை  இயங்கி வருகிறது. இன்று இரவு திடீரென அந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டு எரிந்தது கடைக்குள் இரண்டு ஊழியர்கள் உள்ளே இருந்தவர்கள் தப்பி வெளியே வந்துவிட்டனர்.

Video Link : https://youtu.be/MtTyJBGnORc

ஒரு கட்டத்தில் புகை அதிகமாகி ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் மேல்தளம் வரை வெளி பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்தது .விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். முன்னதாக ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் மற்றும் மேல்தளத்தில் இருந்தவர்கள் அலறி பதட்டத்துடன்  வெளியே ஓடிவந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.  திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *