கோடைக்காலத்தில் சாலை சந்திப்புகளில் நின்று பணிபுரியும் போக்குவரத்து காவல் துறையினருக்கு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் மோர் வழங்கவேண்டுமென திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி திருச்சி மாநகரில் கோடைகாலத்தில் சாலை சந்திப்புகளில் நின்று பணிபுரியும் போக்குவரத்து காவல் துறையினருக்கு இன்றுமுதல் மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட்டது.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து தெற்கு சரக காவல் உதவி ஆணையர் முருகேசன் போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர் வழங்கினார். இன்று முதல் ஜூன் மாதம் வரையிலான கோடை காலம் முழுவதும் திருச்சி மாநகரில் பணிபுரியும் போக்குவரத்து காவல் துறையினருக்கு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் மோர் வழங்கப்பட உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments