Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உலக சிறுநீரக தினம்

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை அரசு சிறுநீரகவியல் துறை சார்பில் இன்று (மார்ச் 10) சிறுநீரக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மு.வனிதா தலைமை வகித்து பேசுகையில்…. உலக சிறுநீரக தினத்திற்க்கான நிகழ்வாண்டிற்க்கான கருப்பொருள்” ஆரோக்கியமான சிறுசீரகத்திற்க்கான அறிவை ஊக்கப்படுத்துதல்” (BRIDGE THE KNOWLEDGE GAP TO BETTER KIDNEY CARE) என்பதாகும்.

இன்று உலகஅளவில் 10 சதவீதம் பேருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினால் அவர்களில் ஒருவருக்கு சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே. இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்தத்தில் உள்ள உப்பு சத்துக்களான யூரியா, கிரியாட்டினின் உள்ளிட்ட பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். இதில் யூரியாவின் அளவில் 40 மில்லி கிராம் டெசிலிட்டர், கிரியாட்டினின் அளவு 1 மில்லி கிராம் டெசிலிட்டர் என்ற சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, தினமும் 45 நிமிட நடைப்பயிற்சி, 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தல். 6 கிராமிற்கு குறைவாக உப்பை பயன்படுத்தல், துரித உணவுகள் மற்றும் டின்களில் அடைத்த உணவுப்பொருட்களை தவிர்த்தல் உள்ளிட்டவற்றை கடைப்பிடித்து ஆரோக்கியமான சிறுநீரகம் பேணுவோம் என்றார். மேலும் மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக சிறுநீரக நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இம்மருத்துவமனையில் பலருக்கும் டயாலிசிஸ் சிகிச்சை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. சிறப்பு டயாலிசிஸ் சிகிச்சை Continuous Renal Replacement Therapy) 2 பேருக்கு இதுவரை (CRRT செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இதுவரை 3 பேருக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறுநீரக பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் E.அருண்ராஜ். சிறுநீரகவியல் மருத்துவர் S. பாலமுருகன். மருத்துவர்கள் பிரகாஷ், மைவிழி உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *