திருச்சியில் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் உலக வண்ணத்துப்பூச்சி தினத்தை முன்னிட்டு இன்று(14.03.2022) தமிழ்நாடு வனத்துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் மேலூர் அய்யனார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 100 மாணவர்களுக்கு உலக வண்ணத்துப்பூச்சி தினமான இன்று வண்ணத்துப்பூச்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் விழிப்புணர்வை ஏற்படுத்தி போட்டிகள் நடத்தப்பட்டது.
களிமண்ணிலான மாதிரிகள்,ஓவியப் போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகள் மாவட்ட வன அலுவலர், உதவி வனப்பாதுகாவலர், வனச்சரகர் தலைமையில் நடைபெற்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments