Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் சைபர் கிரைம்போலீஸ் மூலம் மீட்கப்பட்டது

கடந்த 14. 02. 2022-ந்தேதியன்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சேஷாத்திரிஎன்பவர் ஆன்லைன் மூலமாக National Cyber Crime Reporting Portal(NCRP)-யில் கொடுத்தபுகார் மனுவில் தான் Namezon-ல் ஆன்லைன் மூலம் dry fruits and Nuts-யை தனது கிரடிட்கார்டு மூலம் ரூ. 6, 872/- ஆர்டர் செய்ததாகவும், ஆனால் தான் ஆர்டர் செய்த பொருள் தனக்கு கிடைக்கவில்லை என்ற காரணத்தால், மேற்கண்ட நபர்களை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும், எனவே தனதுபணத்தை மீட்டுத்தரக்கோரி திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார்அளிக்கப்பட்டதன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர்  G. கார்த்திகேயன், உத்தரவுப்படி, முறைகேடாக நடைப்பெற்ற

பரிவர்த்தனைகளைஆராய்ந்ததில் மேற்படி ரூ. 6, 872/- பணம் Payu_payments Pvt. Ltd வழியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீவிர விசாரணையில் தெரியவந்து, சம்மந்தப்பட்ட வங்கியின் LegalDepartment-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்ட பணம் புகார்தாரருக்கு

திரும்ப கிடைக்கும் வகையில் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்ததன் பேரில் மனுதாரரின் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம் ரூ. 6, 872/- திரும்ப மனுதாரரின்வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.

மேலும் இது போன்று ஆன்லைன் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற

ஆன்லைனில் வரும் விளம்பரங்களின் மூலம் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதாக வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும்,

வங்கியிலிருந்து பேசுவதாக கூறுவதையோ, செல்போன்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளையோ நம்பி தங்களுடைய வங்கி கணக்கு விபரங்கள் மற்றும்OTPக்களை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும், அவ்வாறு யாரேனும் ஆன்லைன் மோசடிமூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண்: 1930 அல்லது 155260-ஐ விரைவாக தொடர்பு கொள்ளும்பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டுதர இயலும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *