திருச்சி ரயில்வே ஜங்ஷன் 5வது நடைமேடையில் ரோந்து பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினர் அங்கு நின்ற மூன்று சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் 14 வயது முதல் 16 வயது உடைய சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பீகாரைச் சேர்ந்த 14 வயதான முகேஷ் குமார், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான ரோஷன், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 16 வயதான கல்யாண்சிங் ஆகிய மூன்று சிறுவர்களை தொழிற்சாலையில் பணிபுரிய ஏஜென்ட் மூலம் அழைத்து வரப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து மூவரையும் போலீசார் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிறுவர்களை அழைத்து வந்த ஏஜெண்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments