Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

காக்கை குருவி எங்கள் ஜாதி -உலக சிட்டுக்குருவிகள் தினம் (மார்ச்-20)

சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வலியுறுத்தும் ‘உலகச் சிட்டுக்குருவிகள் நாள்’மார்ச் 20-ம் தேதி காக்கையும், குருவியும் நம் சாதியென்போம் சிட்டுக்குருவிகளை காப்போம், வாட்ஸ்-அப் குழுக்களின் மூலம் ‘வணக்கம்’, ‘இந்த நாள் இனிய நாள்’ என்று பரஸ்பரம் வாழ்த்திக் கொள்வதைக் கடந்து, ஆக்கபூர்வமாகச் செயல்படுபவர்களும் நம்மிடையே இயங்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அப்படியான ஒரு குழுதான் ‘தமிழினி புலனம்’. பெயரைப் பார்த்தால் ஏதோ இலக்கியவாதிகள் நடத்தும் வாட்ஸ்-அப் குழு என்று எண்ணத் தோன்றும். ஆனால், ஒரு மருத்துவரால் நடத்தப்படுகிற, மருத்துவர்களும் செவிலியர்களும் பெருமளவில் அங்கம் வகிக்கின்ற வாட்ஸ்-அப் குழு என்பதுதான் இதன் தனிச்சிறப்பு. மக்களுக்கு மருத்துவ உதவிகள் தாண்டி தற்போது சமூகம் சார்ந்த அக்கறை கொண்ட செயல்பாடுகளையும் இந்த குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் சூழல் காக்கும் முயற்சியாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளனர், 

பறவைகள் நம் சுற்றுச்சுழலின்நண்பர்கள் பறவைகள் இந்த உலகினை அழகுபடுத்துகின்றன மரங்கள் அடர்ந்த காட்டில் குறுக்கும்நெடுக்குமாய் ஒழுங்கற்று நீண்டிருக்கும் கூரியமுட்களின் இடையே உடலைக்கொண்டு நுழைத்து வெளியேறி இரைதேடிப் பசியாறிவரும் பறவைகள் நமக்கு வாழ்க்கையின் வடிவத்தையும் வாழ்தலின் அர்த்தத்தையும் சொல்லுகிறது.

உருவில் சிறியதாக இருப்பதாலேயே சிட்டுக் குருவி என்ற பெயர் வந்தது. சிட்டு போல பறந்தான் – என்ற சொல்லாடல் இவற்றிக்கு பறக்கும் திறனை கொண்டே உருவாகிறது எனலாம். HOUSE SPARROW என்றழைக்கப்படும். இவை சிறியதானாலும் தொன்மையான உலகப் பறவைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது சங்க இலக்கியங்கள் சிட்டுக் குருவியை மனையுறை குருவி என்று குறிப்பிட்டுள்ளன.

உருவத்தில் சிறியதாக அழகான தோற்றம் கொண்ட சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி குரலின் மென்மையையும் ரம்மியமாக ரசிக்கலாம். நகர்ப்புறங்களிலும் பசுமையான பகுதிகளிலும் வாழ்கின்றன என்று அறியப்படுகிறது ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலும் குறைந்து வருகிறது என்று www.findia.org தகவல் தெரிவித்துள்ளது. இந்த உலகக் சிட்டுக்குருவி நாளில் குருவிகளுக்கான இடங்களை மதிக்க குழந்தைகளையும் நம்மை சுற்றியுள்ள மற்றவர்களையும் ஊக்குவிப்போம்.

வீட்டு வாசல்களில் காய வைக்கப்படும் அரிசியும் உணவாக அமைகிறது.நமது கிராமப்புறங்களில் உள்ள கூரை வீடுகள் சிட்டுக் குருவிகளுக்கு ஏற்ற உறைவிடமாகும். அதை தவிர்த்து நகர்ப்புறங்களில் அமைந்துள்ள மாடி வீடுகளில் உள்ள தாழ்வாரங்கள், பொந்துகள் போன்றவையும் ஏற்ற இடங்களாகும். சிட்டுக்குருவிகள். வாழை, தென்னை நார்கள் கொண்டு முறையான வடிவத்தில் இல்லாமல் கூடுகட்டுகின்றன. 3 முதல் 5 முட்டைகள் வரை வெண்மையான நிறத்தில் சிறு புள்ளிகளுடன் இடுகின்றன. நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்.

முன்பு சிட்டுக்குருவிகள் கூடுகள் அமைப்பதற்கான இடமாக கூரைகளின் அடிப்பகுதி இருந்தது. கான்கிரீட் கட்டடங்களில் இதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. சிட்டுக்குருவி வசிக்க கூடுகளை நமது வீடுகளில் ஏற்படுத்தி அதை பாதுகாக்க முன்வருவோம். இவ்வாறு பாதுகாப்பதற்காக நீங்கள் அமைக்கும் கூடுகளை எங்களுக்கு புகைப்படங்களாக எடுத்து அனுப்பினால் அனுப்பும் அனைவருக்கும் ஒரு புத்தகத்தை பரிசாக வழங்க உள்ளோம் என்றார் இக்குழுவின் நிறுவனர் மருத்துவர் வீ.சி சுபாஷ் காந்தி.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *