திண்டுக்கல் நத்தம் காவல் நிலைய ஊர்காவல் படைவீரர் ராகேஷ்( 24)மற்றும் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் திருப்பதி சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளனர். இன்று(29.03.2022) காலை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிகே அகரம் பகுதிக்கு கார் வந்து கொண்டிருந்த போது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது .
உடனடியாக காரில் இருந்து இவர்கள் அனைவரும் வெளியேற முயற்சி செய்தனர் .அதற்குள் தீ மிக வேகமாக பரவியது. காரில் பயணம் செய்த ராகேஷ் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் லேசான தீக்காயங்களுடன் காரில் இருந்து வெளியே தப்பி வந்தனர் .
தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்த உடன் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். கார் முழுவதும் எரிந்தது சேதமானது. இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1மணி நேரம் ஒரு வழி போக்குவரத்து மாற்றப்பட்டது. இச்சம்பவம் குறித்து சிறுகனூர்ரகாவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments